Header Ads

*💦திருமணமான ஆண் பெண் செய்யக்கூடாத 16 விஷயங்கள் இவை தான்..!*





நமது முன்னோர்கள் இந்த கிழமைகளில் இந்த விஷயங்கள் செய்யக்கூடாது, கோவிலுக்கு இந்த சூழலில் இருப்பவர்கள் போகக்கூடாது என பல விஷயங்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதில், திருமணமான ஆண்கள், பெண்கள் என்னென்ன விஷயங்கள் எல்லாம் செய்ய கூடாது என்பதையும் கூறியுள்ளனர்.

அப்படி, அவர்கள் என்னக் கூறியுள்ளனர் என்பதை இங்கே காண்போம்.

💧 சாப்பிடும் உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருண்டை உருட்டியோ சாப்பிடக்கூடாது.

💧 திருமணம் வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த உடனேயே குளிக்கக் கூடாது.

💧 தாய், தந்தை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை சேவிங் செய்தல் கூடாது.

💧 உடலில் இருந்து உதிர்ந்த முடி அல்லது சேவ் செய்த முடி, வெட்டிய நகம் போன்றவற்றை வீட்டில் வைக்க கூடாது.

💧 இரண்டு கைகளை கண்ணத்தில் வைத்தவாறு நிற்கவோ அல்லது அமரவோ கூடாது.

💧 துவைக்காத உடமைகளை கதவின் மேல் போடக் கூடாது.

💧 ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது.

💧 திருமணமான பெண்கள் மஞ்சல் கயிறில் மட்டுமே தாலியை அணிய வேண்டும்.

💧 கோவிலில் விழுந்து வணங்கும் போதோ அல்லது அங்கப்ரதஷணம் செய்யும் பொழுதோ மார்பு பூமியில் படும்படி வணங்க கூடாது.

💧 முக்கியமாக கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.

💧 பெண்கள் எப்பொழுதும் முந்தானையை தொங்கவிட்டபடி நடக்கக் கூடாது.

💧 கடவுளை வணங்கும் பொழுது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு நெற்றி பூமியில் படும்படி கும்பிட வேண்டும்.

💧 வீட்டின் வாசலில் கோலம் போடும் பொழுது தெற்கே நின்றபடி இடக் கூடாது.

💧 திருமணமான பெண்கள் காலில் ஒருவிரலில் மட்டுமே மெட்டி அணிதல் வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று விரல்களில் மெட்டி அணியக் கூடாது.

💧 கர்ப்பமான பெண்கள் மிகவும் உக்கிரமான கோவில்களுக்கு செல்லக் கூடாது.

💧 அமாவாசை மற்றும் தவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.

No comments

Powered by Blogger.