உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் !!
👉 நாம் சத்தான உணவுகளை சாப்பிடுவதாலும், தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதனாலும் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறானது. ஏனெனில் தினந்தோறும் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவசியமாகும். எனவே நம் ஆரோக்கியத்திற்கான பழக்கவழக்கங்கள் பற்றி இங்கு காண்போம்.
👉 தினமும் 10-20 நிமிடம் தியானம் செய்து வந்தால், மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, தேவையில்லாத கவலைகள் அகலும். இதனால் மனஅழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும். மேலும் இரத்த அழுத்தம் குறையும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
👉 தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய பழகிக் கொள்ளுங்கள்.
👉 ஒருவருக்கு போதிய அளவு தூக்கம் இல்லாவிட்டால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதுவே முற்றுப்புள்ளியாகி விடும். எனவே இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும் உணவுகளுடன், உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.
👉 தினந்தோறும், காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
👉 அன்றாட உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி சிறுதானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
👉 குளிக்கும்போது குதிகாலையும், கால் விரல்களையும் நன்றாக தேய்த்துக் கழுவுங்கள்.
👉 அருகிலிருக்கும் கடைக்குச் செல்ல வாகனங்களைப் பயன்படுத்தாமல், நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
👉 தினந்தோறும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. இதனால் இடுப்பு அழகு பெறுவதுடன் தொந்தி குறையும்.
👉 மறக்காமல், ஒரு பாட்டிலில் தண்ணீரை படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும் வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போது தண்ணீர் குடியுங்கள்.
👉 கை மற்றும் கால் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ள மறவாதீர்கள்.
👉 அதிக சூடான மற்றும் அதிக குளிர் உணவுகளை உண்பதை தவிர்ப்பதன் மூலம் பல் சம்மந்தப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
👉 இரவில் இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விட்டு உறங்க செல்லுங்கள். மேலும் இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூங்குவதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
Post a Comment